PUBLISHED ON : அக் 09, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ட கனவுகள்
பலிக்குமென
நம்பிக்கை விதைகளை
இதயத்தில் ஊன்று!
அவநம்பிக்கை
மனிதர்களை
அடியோடு
ஒதுக்கி விடு!
முயலாமை
உடையோரை
அயலானாய்
தள்ளி விடு!
அறிவிலிகளோடு
சேர்ந்து
அறியாமை இருளுக்குள்
அணைந்து விடாதே!
தோல்வியின்
முகவரிகள்
துரத்தி வந்தாலும்
மனதை துவள விடாதே!
இறைவனின் படைப்பில்
எதுவும் பயனுள்ள
பாத்திரமே
இதை மனதிற்கொள்
உன்னை உயர்வாய்
நினைத்துக்கொள்!
உன் நம்பிக்கை
குறையும்போது
இறை நம்பிக்கையை
மனதில் பிணைத்துக்கொள்!
உன்னால் முடியுமென
நீ நினைத்தால்
இமயம் கூட
உன் காலடியில்
மண்டியிட்டு
உனை வணங்கும்!
இறைவனின் படைப்பில்
நீ அபூர்வமானவன்
நீ பூமித்தாயின்
நேசக் குழந்தை
உன்னால்
புவி மலரட்டும்
இதயங்கள் சிரிக்கட்டும்!
சங்கீதா சுரேஷ், தர்மபுரி.

