தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மடி மீது தலை வைத்து!

மடி மீது தலை வைத்து!

மடி மீது தலை வைத்து!


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானை சேர்ந்த, பிரபலமான, தலையணை தயாரிப்பு நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, புதுசு புதுசாக, யோசித்து வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனம் பயன்படுத்திய யுக்தியை பார்த்து, அதன் போட்டி நிறுவனங்கள், ஆச்சரியப்படுகின்றன.

பொதுவாக, தலையணை எப்படி இருக்கும் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த ஜப்பான் நிறுவனமோ, பெண்களின் மடி போன்ற வடிவத்தில், தலையணையை தயாரித்து, அசத்தியுள்ளது.

இந்த தலையணையை வாங்குவதற்கு, வாடிக்கையாளர்களிடையே, கடும் போட்டி நிலவுகிறது. முன்பதிவுக்காக முட்டி மோதுகின்றனர். 'இந்த தலையணையில், அப்படி என்ன விசேஷம்' என, கேட்டால், 'என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க... இதில், இளைஞர்கள் தலை வைத்து படுத்தால், காதலியின் மடியில் படுப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிறுவர்கள் படுத்தால், தங்கள் தாயின் மடியில் படுத்தது போன்ற உணர்வு ஏற்படும்...' என, தத்துவார்த்தமாக கூறுகின்றனர். கல்லா கட்டுவதற்கு, எப்படியெல்லாம், யோசிக்கிறாங்க!

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us