PUBLISHED ON : அக் 08, 2023

அ நிறம் | அளவு
கொலுவுக்கு சில தினங்கள் இருக்கும் போது, பொம்மைகளை எடுத்து, துடைத்து வையுங்கள். உடைந்திருக்கிற பொம்மைகளை சரி செய்யுங்கள்.
பழைய பொம்மைகளுக்கு, 'பேப்ரிக் பெயின்ட்' அடித்து, அதன் மீது, 'பிளைன் வார்னிஷ்' பூசுங்கள்.
பெண் பொம்மைகளின் நகை, புடவை பார்டர் உள்ளிட்டவற்றிற்கு, கோல்டன் கலர் பெயின்ட் அல்லது கோல்டன் பவுடர் போட்டு புதுப்பிக்கவும். பொம்மைகளின் மீதுள்ள புடவைக்கு கற்கள் பதித்து, பழைய பொம்மைகளை, புதிது போல் ஆக்கலாம்.
யார் யாரைக் கூப்பிடப் போகிறோம் என்ற, 'லிஸ்ட்' தயார் செய்து, அவர்களின் போன் நம்பரை முன்னரே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
