
* கொலுவில் மலைகள் அமைத்த பின், அவற்றின் மேல் சிறிதளவு பஞ்சை மேலிருந்து கீழாக வருமாறு ஒட்டி வைத்தால், துாரத்தில் நின்று பார்க்கும்போது, மலையிலிருந்து அருவி கொட்டுவது போலிருக்கும்
* மலை அமைக்கும்போதே, சிறிய தகர டப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படி செய்தால், மலையிலிருந்து பனி புகை வருவது போல், பார்க்க அழகாக இருக்கும்
* மலை அமைத்ததும், அதில் ஆங்காங்கே சிறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால், அதன் அழகே தனி
* காலையில் விளக்கேற்றி வைத்து, ஒன்பது நாட்களிலும் தேவி மகாத்மியம், சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி என, ஸ்தோத்திர பாராயணங்கள் தினமும் செய்ய வேண்டும். அப்போது தான் வீட்டிற்கும், நாட்டிற்கும் சுபிட்சங்கள் ஏற்படும்
* நவராத்திரிக்கு, 10 நாட்கள் முன்பே, ஐஸ்கிரீம் கப்புகளில் மண்ணுடன் சிறிது வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒருநாள் முழுவதும் ஊற வைத்த கடுகு, வெந்தயம், கேழ்வரகை தெளித்தால், செடிகள் செழித்து வளரும். படிகளின் இருபக்கங்களிலும், 'பார்க்'கிலும் வைத்தால், பார்க்க அழகாக, பசுமையாக இருக்கும்.