/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஒரே நிமிடத்தில் 137 பேரிடம் முத்தம்!
/
ஒரே நிமிடத்தில் 137 பேரிடம் முத்தம்!
PUBLISHED ON : மார் 17, 2013

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை வீணா மாலிக், தடாலடியான காரியங்களுக்கு பெயர் பெற்றவர். ஏராளமான உருதுப் படங்களில் நடித்துள்ள இவர், கணிசமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், தன் பிறந்த நாளையொட்டி, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். 'என் பிறந்த நாளன்று, ஒரே நிமிடத்தில், எனக்கு எவ்வளவு பேர், முத்தம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு பேர் முத்தம் கொடுக்கலாம்...' என, வார்த்தை பட்டாசை கொளுத்திப் போட்டார்.
இதையடுத்து, அவர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த மும்பை ஓட்டலில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். ஆனால், வந்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம். 'கையில் தான், முத்தம் கொடுக்க வேண்டும். உதட்டில் கொடுக்க கூடாது...' என, அன்பு கட்டளை போட்டார், வீணா மாலிக். வேறு வழியில்லாமல், வீணா மாலிக் கையை நீட்ட, வரிசையாக, அவரது கையில், தங்கள் இதழ்களை பதித்துச் சென்றனர், ரசிகர்கள். ஒரே நிமிடத்தில், 137 பேர், வீணாவுக்கு முத்தம் கொடுத்தனர். இது, ஒரு கின்னஸ் சாதனை.
'வீணா மாலிக் நடித்த, ஒரு இந்தி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, இதுபோன்ற விழாக்களுக்கு ஏற்பாடு செய்து, ரசிகர்களை ஏமாற்றுகின்றனர்...' என, பாலிவுட்டிலிருந்து குமுறல்கள் எழுகின்றன.
— ஜோல்னா பையன்.

