தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/""லாவோஸ்'' ஜாடிகள் ! - எஸ்.உமாபதி

""லாவோஸ்'' ஜாடிகள் ! - எஸ்.உமாபதி

""லாவோஸ்'' ஜாடிகள் ! - எஸ்.உமாபதி


PUBLISHED ON : நவ 07, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜிங் குவாங் என்ற சமவெளி, லாவோஸ் நாட்டில் உள்ளது. இது, ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மணற்பாறை, கருங்கல் மற்றும் சுண்ணாம்பால் செய்யப்பட்ட விசித்திரமான,  தொன்மையான ஜாடிகள் ஆயிரக் கணக்கில் காணப்படுகின்றன. இவை கற் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புதிர் நிறைந்த கவர்ச்சியான இந்த ஜாடிகள் தொல்லியலாளர்களையும், விஞ் ஞானிகளையும் ஆச்சரியப் படுத்தி வருகின்றன.  கண்டு பிடிக்கப்பட்ட இந்த ஜாடி கள்,  ஒவ்வொன்றும்  ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமும், 13 டன்கள் வரை எடையும் கொண்டவை. இந்த ஜாடிகளின் உண்மை யான பயன்பாடு என்ன வென்று தெரியவில்லை. இறந்தவர்களை புதைப் பதற்கு  இவை பயன்பட்டி ருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.  இருப்பினும்,  இது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன. 'ஜார்ஸ் சமவெளியில் நானூறுக்கும் மேற் பட்ட இடத்தில் இந்த ஜாடிகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. போன்சவான் என்ற நகருக்கு அருகே 250க்கும் மேற்பட்ட ஜாடிகள் ஒரே இடத்தில் இருப்பது, இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப் பதற்காக இந்த ஜாடிகள் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது!' என்று, பிரஞ்சு தொல்லியலாளர் மடிலேன் கோலனி கூறுகிறார். 

ஜாடிகள் புதையுண்ட இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியாததற்கு ஒரு ஆபத்தான காரணம் கூறப்படுகிறது. 1960 முதல் 1970 வரையிலான காலத்தில், வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. அப் போது, லாவோஸ் நாட்டின் மீதும்  அதிகளவில் குண்டுகள் விழுந்தன. இந்த குண்டுகள் தாக்கி, வரலாற்று பெருமை கொண்ட ஏராளமான ஜாடிகள் சேதமடைந்தன. ஜார்ஸ் சமவெளியில் வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் பூமியில் புதையுண்டன. மேலும், 2 லட்சத்து 50 ஆயிரம் கண்ணி வெடிகள் பூமியில் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்ள்ளது. பூமியில் புதையுண்டுள்ள குண்டுகளில் 30 சதவீதம் இன்னும் தோண்டி எடுக்கப் படவில்லை.  இவற்றால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்ற பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது. வாரத்திற்கு ஒரு விபத்தாவது இப்பகுதியில் ஏற்படுகிறது. ஜார்ஸ் சமவெளி ஆபத்தான பகுதி என்று தெரிந்த போதிலும், தொன்மையான ஜாடிகளை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் குவிகின் றனர். தற்போது, இந்த ஜாடிகள் ஒரு புதிரான விஷயமாக இருந் தாலும், என்றாவது இந்த புதிர் விடுவிக்கப்படும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் நம்பிக்கை.                            ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us