PUBLISHED ON : ஜூலை 02, 2023

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது, உலகின் மிகப்பெரிய வட்ட வடிவ ஏரி. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரி அல்ல இது; இயற்கையாகவே உருவானது.
துல்லியமாக அளவெடுத்து வெட்டியது போல், மிகச் சரியான வட்ட வடிவத்தில் உள்ள இந்த ஏரி, புளோரிடா மாகாணத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த ஏரி, 90 மீட்டர் ஆழமுள்ளது. ஏரியின் ஒரு கரைக்கும், மற்றொரு கரைக்கும் உள்ள சுற்றளவு, 8.8 கி.மீ., என்றால், இது எவ்வளவு பெரிய ஏரியாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். வட்ட வடிவில் அமைந்துள்ள இந்த ஏரி, 'சில்வர் லேக்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஜோல்னாபையன்
