PUBLISHED ON : ஜூலை 31, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் உள்ளவர் பெயர், த்ரெசியம்மா. வயது: 84. கேரள மாநிலம், கோதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, சிறு வயதிலேயே திருமணமானது.
மருத்துவமனைக்கு செல்லாமலும், எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமலே, 15 குழந்தைகளை பெற்றுள்ளார். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். அத்தனை பேருக்கும் திருமணம் செய்து வைத்து, கொள்ளு பேரன் - பேத்திகளையும் எடுத்து விட்டார், த்ரெசியம்மா.
இன்று வரை அலோபதி மருந்துகளை நாடாமல், நல்ல ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக இருக்கிறார், த்ரெசியம்மா.
'உங்கள் இளமையின் ரகசியம் என்ன?' என்று கேட்டால், சிரிப்பு தான் பதிலாக வருகிறது.
அந்த சிரிப்பு தான், இவரது இளமைக்கு காரணம் என்கிறாரோ!
ஜோல்னாபையன்