PUBLISHED ON : ஜன 22, 2017
1.இந்தியாவில், குறைந்த வயதில், ஜனாதிபதி பதவியை பெற்றவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி; ஜூலை, 25, 1977ல் பதவி ஏற்ற போது, அவரது வயது, 64.
2.இந்தியாவின் முதல் நீர் மூழ்கி கப்பல் எது?
ஐ.என்.எஸ்., கல்வாரி
3.இந்திய வரலாற்றிலேயே, குற்றவாளி கூண்டில் ஏறிய பிரதமர் யார்?
பி.வி.நரசிம்மராவ்; 1996ம் ஆண்டு
4.இந்தியாவில், தேசிய மொழியாக இந்தி எப்போது அறிவிக்கப்பட்டது?
செப்., 15, 1949.
5.இந்தியாவின், தேசிய விலங்காக, புலி எப்போது அறிவிக்கப்பட்டது?
நவ., 18, 1972.
6.இந்திய தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவரின் பெயர் என்ன?
ஹெர்பர்ட்மூரில்
7.இந்தியா தயாரித்த பெரிய போர்க்கப்பல் எது?
ஐ.என்.எஸ்.டில்லி.
8.இந்தியா சுதந்திரம் அடைந்த பின், முதல் பொதுத் தேர்தல், எப்போது நடந்தது?
1952.
9.ஜனாதிபதியாக, பதவி ஏற்பவர், யாருடைய முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்?
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
10. காந்திஜியை தன் தந்தையாக, சுவீகாரம் எடுத்துக் கொண்டவர் யார்?
ஜமுனாலால் பஜாஜ்.
11.காந்திஜியின் வாழ்க்கை சம்பவங்களை, டாக்குமென்டரி படமாக எடுத்தவர் யார்?
ஏ.கே.செட்டியார்,1940ம் ஆண்டு.
12.இந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் யார்?
எட்வின் லாட்யன்ஸ்.
13.இந்தியாவில், வாக்குரிமை வயது, 18 என்ற சட்டம், எப்போது அமல்படுத்தப்பட்டது?
1989.
14.இந்தியாவில், வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் யார்?
வர்கீஸ் குரியன்.
15.நாட்டு நலனுக்காக, தன் ஐ.சி.எஸ்., பதவியை, ராஜினாமா செய்த முதல் இந்தியர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்
