PUBLISHED ON : டிச 17, 2017

அ நிறம் | அளவு
சீனாவில் உள்ள ஹெபேய் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள், முற்றிலும் தாவர இலைகளை மட்டுமே வைத்து, அழகிய உடையை தயாரித்துள்ளனர்.
இந்த உடையை தயாரிக்க ஆறு மாதங்கள் செலவிட்டுள்ளனர். மேலும், இந்த உடைக்காக, ஆறாயிரம் இலைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. உடையை தயாரிப்பதற்கு ஏற்ற இலைகளை சேகரித்து, அவற்றை உலர வைத்து, பக்குவப்படுத்தி, பின், மெல்லிய நுாலால் அவற்றை கோர்த்து, இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
'சாதனைக்காக இதைச் செய்யவில்லை; இந்த ஆடையை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை, ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்...' என்கின்றனர், அம்மாணவர்கள்.
— ஜோல்னாபையன்.
