PUBLISHED ON : ஜூன் 19, 2022

அ நிறம் | அளவு
*சாதம் மிஞ்சி விட்டால் அதில் இரண்டு பங்கு தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும், இறக்கி வடித்து விடவும். பின்னர், மறுபடியும் ஐந்து நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால், நீர்ப்பசை அகன்று புதிதாக சமைத்ததைப் போல் இருக்கும்
* பால் வகை இனிப்புகள் மீந்து விட்டால், பாயசம் செய்யும்போது உதிர்த்து சேர்த்தால் சுவை கூடும்
* உப்புமா மீந்து போனால் அதை உருட்டி, கடலை மாவு, சுக்குத்துாள், ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கரைத்த மாவில் தேய்த்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால், போண்டா ரெடி
* சட்னி வகைகள் மீந்து விட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்து, சுவையான ரய்த்தா செய்யலாம்.
