தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : ஜூலை 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

ஜகா வாங்கிய கே.எஸ்.ரவிக்குமார்!

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவகாரம், கோலிவுட்டில் பற்றி எரிந்து வரும் நிலையில், ஒரு கருத்து கணிப்பில், 'விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்...' என்று கூறப்பட்டது. இது எரிகிற நெருப்பில், மேலும் எண்ணெயை ஊற்றிய கதையாகி விட்டது. அதனால், 'பேஸ்புக்'கில் விஜய் -அஜித் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான்...' என்று, 'பேஸ் - புக்'கில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி வெளியிட, அது விஜய் தரப்பை கொந்தளிக்க செய்தது. இந்நிலையில், அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்

கே.எஸ்.ரவிக்குமார். அதில், 'தற்போது, நான், லிங்கா படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். இந்நேரத்தில், சூப்பர் ஸ்டார் பிரச்னை, எனக்கு தேவையில்லாதது...' என்று தெரிவித்துள்ள அவர், 'என் பெயரில், போலி, 'பேஸ்புக்' துவங்கிய யாரோ தான், இப்படியொரு செய்தியை பரப்பி விட்டுள்ளார்; அதனால், என்னை யாரும் தவறாக கருத வேண்டாம்...' என்றும் கூறியுள்ளார்.

— சினிமா பொன்னையா.

இசையமைக்க சான்ஸ் கேட்கும் ஆன்ட்ரியா!

நடிப்பு, பாடகி என்று இரண்டு முகம் காட்டி வரும் ஆன்ட்ரியாவுக்கு, சமீபகாலமாய் இசையமைப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஸ்பாட்டில் தான் நடித்துக் கொண்டிருக்கும்போது, முணு முணுத்த ஒரு டியூனை, தான் நடித்துள்ள, தரமணி பட டைரக்டர் ராமிடம் காண்பித்து, அதை, இப்போது அந்த படத்திலும், ஒரு பாடலாக இணைத்து விட்டார். அதையடுத்து, முழுப்படத்திற்கு இசையமைக்கும் ஆசையில் திரியும் ஆன்ட்ரியா, தன் கற்பனையில் உருவான டியூன்களை, ஒரு ஆல்பமாக தயார் செய்து, இயக்குனர்களிடம் போட்டுக் காட்டி, சான்ஸ் கேட்டு வருகிறார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!

— எலீசா.

த்ரிஷ்யம் படத்துக்கு தயாராகும் கமல்!

விஸ்வரூபம் -2, உத்தமவில்லன் பட வேலைகளில் படு பிசியாக இயங்கிக்கொண்டிருந்த கமல், தற்போது அந்த இரண்டு பட வேலைகளையும் முடித்துக் கொடுக்கும் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அதனால், அதையடுத்து, அவர் நடிக்கும், மலையாள ரீ-மேக்கான த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பு ஆயத்த வேலைகளை துவங்கி விட்டனர். இதே படத்தின் கன்னட ரீ-மேக்கை, பி.வாசுவும், தெலுங்கு ரீ-மேக்கை நடிகை ஸ்ரீப்ரியாவும் இயக்குகின்றனர். ஆனால், மலையாளத்தில் அப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே, தமிழ் படத்தை இயக்குகிறார். மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரம், கமலுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதால், தமிழிலும் இப்படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து, கோலிவுட்டில் தன் பெயரை நிலை நிறுத்தி விட வேண்டும் என்று, திட்டமிட்டுள்ளார் ஜீத்து ஜோசப்.

— சி.பொ.,

டூப் போடாத ஆர்யா!

மீகாமன் படத்தில், மாலுமி வேடத்தில் நடிக்கிறார் ஆர்யா. கடல் வழியில் நடைபெறும், சமூக விரோத செயல்களைக் கண்டு பொங்கி எழும் ஆர்யா, அந்த சமூக விரோதிகளை அழிப்பதுதான் கதையாம். இந்திய கடல் வழிப்பாதையில் நடக்கும், இந்த கதைகளத்தில், ஏழு மெகா வில்லன்களுடன், சண்டை காட்சியில் நடிக்கும் ஆர்யா, எந்த சண்டை காட்சியிலும் டூப் நடிகரை, பயன்படுத்தாமல், தானே முயற்சி எடுத்து, நடித்து வருகிறார்.

— சி.பொ.,

த்ரிஷாவின் வசூல் வேட்டை!

நமீதா, பிந்துமாதவி போன்ற நடிகைகள், லோக்கலில் உள்ள கடை திறப்பு விழா மற்றும் ஜூவல்லரி திறப்பு விழாக்களுக்கு சென்று ரிப்பன், வெட்டி வரும் நிலையில், த்ரிஷாவோ, அமெரிக்கா, லண்டன் என்று செல்கிறார். அங்குள்ள தமிழக அமைப்புகளிடம் தொடர்பு வைத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு, 'விசிட்' அடித்து வருகிறார். அப்படி செல்லும் விழாக்களுக்கு, பல லட்சங்களை கறந்து விடும் த்ரிஷா, அங்குள்ள கடை திறப்பு விழாக்களுக்கு சென்று, ரிப்பன் வெட்ட, கோலிவுட்டின் மெகா நடிகை என்பதை முன்வைத்தே, ஒரு படத்திற்கு வாங்கும் தொகையை, வெறும் ரிப்பன் வெட்டுவதற்காக வாங்கி விடுகிறார். ஆக, பட வாய்ப்பு டல்லடித்தாலும், த்ரிஷாவின் வசூல் வேட்டை, குறையவில்லை.

— சினிமா பொன்னையா.

சமந்தாவை பின்தள்ளிய ஸ்ருதிஹாசன்!

தமிழில், அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ள சமந்தா, தெலுங்கில் தான் தான், நம்பர்-ஒன் என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில், தென்னிந்திய நடிகைகளில், முதல் பத்து இடங்களில் முதலிடத்தை ஸ்ருதிஹாசன் கைப்பற்றியிருக்கிறார். அதற்கடுத்து காஜல் அகர்வால், ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகள், அடுத்தடுத்து கைப்பற்றி விட்டனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்திருந்த சமந்தாவோ, இந்த முறை, 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் சமந்தா, தான் இந்த அளவுக்கு பின்தங்கியதற்கு காரணமே, ஸ்ருதிஹாசன்தான் என்று முடிவெடுத்து, அவரை வீழ்த்துவற்கான திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். வந்தது சண்டை; இறக்கடி கூடையை!

— எலீசா.

கறுப்பு பூனை!

கவலைப்படாத வாலிபர் சங்கம் பட நாயகியான அந்த ஆந்திர நடிகை, ஆரம்பத்தில், சின்னச் சின்ன ஓட்டல்களில் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டவர், தற்போது 'ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குவேன்...' என்று, அடம் பிடித்து வருகிறார். அதோடு, தன்னுடன், தாய்க்குலம் மட்டுமின்றி, மேலும் சிலரையும் தங்க வைத்து, தயாரிப்பாளர்களுக்கு பெரிய செலவையும் ஏற்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே, கரிகாலன் என்ற படத்தின் கதை, இன்னொருவர் கதையின் காப்பி என்று கூறப்பட்டதால், அப்படத்திலிருந்து வெளியேறினார் சீயான் நடிகர். ஆனால், இப்போது, கோலிசோடா இயக்குனருடன் அவர்

இணைந்துள்ள படத்தின் கதையும், த டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கில படத்தை போன்று இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இதை கேள்விப்பட்டதில் இருந்து ஸ்பாட்டில் எந்நேரமும்

டென்ஷனிலேயே இருக்கிறார் சீயான்.

துளிகள்!

* பேஸ்புக்கில், நடிகை காஜல் அகர்வாலை, ஒரு கோடியே பதினைந்து ஆயிரத்து எண்ணுாற்றி எழுபது பேர், பின் தொடர்கின்றனர்.

* சிவகார்த்திகேயனுடன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து

வருகிறார்.

* பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்து, தன் நண்பரும், இயக்குனருமான தரணி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

* அனுஷ்கா, நயன்தாரா இருவரும், ஒரு படத்தில் நடிக்க மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us