தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : ஏப் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

இதுவரை தான் இசையமைத்துள்ள, 1,000 படங்களின் ஆடியோ உரிமையை, அந்தந்த படங்களை தயாரித்தவர்களுக்கே எழுதிக் கொடுத்துள்ளார் இளையராஜா. அதோடு, அதிலிருந்து தனக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று, அவர்களை கேட்டுள்ளார். மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையில், விரைவில், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் இளையராஜா. அந்நிகழ்ச்சி, தமிழகத்தின் முக்கிய நகரங்களான, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் நடைபெற உள்ளது.

- சினிமா பொன்னையா

அதிரடி நாயகியாக காஜல் அகர்வால்!

தனுஷுடன், மாரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால், அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர், விக்ரமை வைத்து இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இது, விக்ரமுடன், அவர் இணைந்து நடிக்கும் முதல் படம். அத்துடன், இப்படத்தில் முதன்மை நாயகி வேடம் என்பதால், தெலுங்கு படங்களில் நடிப்பது போன்று அதிரடியாக நடிக்க முடிவு செய்துள்ள காஜல், முன்பு மாதிரி கவர்ச்சி, கரன்சி விஷயத்தில் எக்குத்தப்பாக பேசாமல், விக்ரம் படம் என்றதும், உடனே, 'அட்வான்சை' வாங்கிக் கொண்டார். தொட்டது துலங்கும்; வைத்தது விளங்கும்!

— எலீசா

நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே!

பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த, தோனி படத்தில் நாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இவரது நிர்வாண படங்கள், சமீபத்தில், இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை உருவாக்கின. அதையடுத்து, 'அப்படத்தில் இருப்பது நான் அல்ல; வேறு பெண்ணின் உடம்புடன், என் தலையை இணைத்துள்ளனர்; இது சமூக விரோதிகளின் சதி...' என்று மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், தற்போது, ஒரு ஹாலிவுட் படத்தில் உண்மையாகவே நிர்வாண காட்சியில் நடிக்கிறார். உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நடித்த அந்த ஒரு காட்சியை மட்டுமே, மூன்று நாட்கள் படமாக்கியுள்ளனர். அப்படத்தை இந்தியாவில் வெளியிடும்போது, இக்காட்சியை கத்தரித்து விட வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம், 'அக்ரிமென்ட்' போட்டுள்ளார் ராதிகா ஆப்தே. இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்பது போல்!

— எலீசா

சம்பளத்தை உயர்த்திய கவுண்டமணி!

நடிகர் கவுண்டமணிக்கு தற்போது, 75 வயது. ஆனாலும், 49ஓ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அவர், அடுத்தபடியாக, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், அடுத்தடுத்து சில இயக்குனர்களும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொல்லி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை, 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் நடித்து வந்த கவுண்டமணி, இனிமேல், 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார். அதோடு, 'நேத்து வந்த நடிகைகளுக்கெல்லாம் கோடிக்கணக்குல சம்பளம் தர்றீங்க; நான், 40 ஆண்டு கால நடிகன்; எனக்கு ஒரு, 50 லட்சம் ரூபா தர மாட்டீங்களா...' என்று தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களிடம், அன்புச்சண்டை போட்டு வருகிறார்.

- சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* போதைப் பொருளான, பாங்கு குடிப்பது, கேடி பில்லா கில்லாடி ரங்கா நடிகைக்கு வழக்கமாகி விட்டது. அதனால், சில நாட்களில் படப்பிடிப்பு தளத்துக்கே, பாங்கு குடித்து தள்ளாடியபடி வரும் நடிகை, சக கலைஞர்களுடன் ரகளையில் ஈடுபடுகிறார். இதனால், தற்போது அவர் நடித்து வரும், படத்தின் இயக்குனர், 'இனிமேல் போதையுடன் ஸ்பாட்டுக்கு வந்தால், படத்தில் இருந்தே தூக்கி விடுவேன்...' என்று நடிகையை எச்சரித்துள்ளார்.

* தனக்கு சிபாரிசு கோரி, பருத்திவீரனை துரத்த துவங்கியிருக்கிறார் பையா நடிகை. ஆனால், நடிகரோ, ஏற்கனவே தங்களுக்கிடையே இருந்த கசமுசா காரணமாக, மீண்டும் நடிகையுடன் நட்பு வைத்து, விஷயம், 'லீக்' ஆனால், குடும்பத்தில் புயலடிக்கும் என்பதால், நடிகைக்கு பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்.

* அஞ்சான் நடிகைக்கு, மப்பு நடிகர்களின் சகவாசம் அதிகரித்துள்ளது. இந்த சேதி அவரது மாஜி காதலரான பாய்ஸ் நடிகருக்கு தெரிய வர, 'ஓவராக மப்பு குளத்தில் இறங்காதே; உடம்புக்கு நல்லதல்ல...' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி நடிகைக்கு, 'அட்வைஸ்' கொடுத்திருக்கிறார். அதற்கு, 'கழட்டி விட்டவர்க ௌல்லாம், என்மேல் கரிசனம் காட்ட வேண்டிய அவசியமில்லை...' என்று நடிகருக்கு பதில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, 'ஆப்' செய்து விட்டார் நடிகை.

சினி துளிகள்:

* படப்பிடிப்பு தளங்களில் கடலை போட ஆள் கிடைக்கவில்லை என்றால், எந்நேரமும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார், சமந்தா.

* கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த ரெஜினா, தற்போது ஒரு தெலுங்கு படத்தில், தமன்னா ரேஞ்சுக்கு, கிளாமர் காட்டி நடித்து வருகிறார்.

* என் ராசாவின் மனசிலே படத்தின், இரண்டாம் பாகத்தில், மீண்டும் மீனாவை நடிக்க வைக்கிறார் ராஜ்கிரண்.

* சிறுத்தை சிவா இயக்கும் அஜித் படத்தை, ஸ்ருதிஹாசன் கைப்பற்றி விட்டதால், அப்செட்டில் இருக்கிறார் தமன்னா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us