sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல..

/

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : செப் 17, 2017

Google News

PUBLISHED ON : செப் 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளை மாளிகைக்கு, 'பெட்டிஷன்' அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!

திரைப்படங்கள் வெளியானதும், உடனடியாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்கும் முயற்சியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கியுள்ளது. அதையடுத்து, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, அதை, அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து செயல்படுத்தப்படும் சட்டப்பூர்வமற்ற, 'சர்வர்'களை முடக்கவே, இந்த, 'பெட்டிஷன்' அனுப்பப்படுகிறது.

சி.பொ.,

பிகினி நடிகையாகும் டாப்சி!

தமிழில், வை ராஜா வை படத்திற்கு பின், புதிய படம் இல்லாமல், இந்திக்கு சென்று, நடித்து வருகிறார் டாப்சி. தமிழில், கோடு போட்டு நடித்து வந்த டாப்சி, இந்தி சினிமாவில், தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள நடிகைகளைப் போன்று, கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். அதன் காரணமாக, தற்போது நடித்து வரும், ஜூட்வா-2 என்ற படத்தில், பிகினி உடையணிந்து நடித்து, இந்தி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

— எலீசா

மூன்று, 'கெட்டப்'பில் த்ரிஷா!

விஜயசேதுபதிக்கு ஜோடியாக, த்ரிஷா நடித்து வரும் படம், 96. இப்படத்தில் பள்ளி மாணவி, ஆசிரியை மற்றும் 50 வயது பெண்மணி என, மூன்று வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. இவ்வேடங்களுக்காக, தன் உடல் எடையை குறைத்தும், அதிகப்படுத்தியும் நடித்துள்ளவர், 'ஒரே படத்தில், பல கெட்டப்புகளில் நடிப்பதன் கஷ்டத்தை, முதன்முறையாக இப்போது தான், உணர்கிறேன்...' என்கிறார்.

அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு!

எலீசா

ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!

ரஜினியுடன், சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானவர், ஸ்ரேயா. சமீபத்தில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துள்ளவர், தற்போது, இளவட்ட நடிகர்களுக்கு ஜோடி சேரும் ஆசையை துறந்து, சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். அவ்வகையில், பாலகிருஷ்ணா மற்றும் நாகார்ஜுனா போன்ற, 50, 60 வயதுடைய, தெலுங்கு நடிகர்கள், அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில், தமிழில், அந்த மாதிரி சீனியர் கதாநாயகர்கள் தன்னை கண்டு கொள்ளாதது, ஸ்ரேயாவுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறி, கதிர் காமா, கதிர் காமா என்றால் கைக் கொடுக்குமா!

எலீசா

பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!

இசையமைப்பாளர் ஆதி, நாயகனாக நடித்த, மீசைய முறுக்கு படத்தில், நாயகியாக நடித்தவர், ஆத்மிகா. தமிழக பெண்ணான இவருக்கு, சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை. 'பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவரும் இயல்பான நடிகையாக, சினிமாவில் சிறிய இடத்தை பிடித்தாலே போதும்...' என்கிறார். மேலும், முறைப்படி சங்கீதம் கற்றிருக்கும் ஆத்மிகா, 'சினிமாவில் நிறைய பாட வேண்டும் என்பதே என் பெரிய ஆசையாக உள்ளது...' என்கிறார்.ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?

எலீசா

அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!

அஜித் நடித்த, ஆரம்பம் படத்தை தயாரித்த, ஏ.எம்.ரத்னம், சாய்பாபாவின் பக்தர் என்பதால், அந்த படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும், வியாழக்கிழமைகளில் வெளியிட்டார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, வியாழக்கிழமை சென்டிமென்டை, தன் ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து வருகிறார், அஜித். அதையடுத்து, தற்போது, விஜயசேதுபதியின், கருப்பன் படத்தை தயாரித்து வரும் ஏ.எம். ரத்னம், இந்த படத்தையும் வியாழக்கிழமையில் துவங்கியதை அடுத்து, ஆடியோவையும், வியாழக்கிழமையே வெளியிட்டார். விளைவு, இப்போது, அஜித் பாணியில், விஜயசேதுபதியும் இனிமேல் வியாழக்கிழமை சென்டிமென்டை கடைப் பிடிக்கப் போவதாக சொல்கிறார்.

— சி.பொ.,

கறுப்பு பூனை!

தன் முதல் இரண்டு படங்களில், புனே நடிகைக்கு, 'சான்ஸ்' கொடுத்து, கிசுகிசுவில் சிக்கியவர், வாசனை காமெடியன். அதனால், இனி, படத்திற்கு ஒரு நாயகி என, பயன்படுத்தப் போவதாக சொன்னவர், தற்போது, தில்லுக்கு துட்டு பட நாயகியையே, தன் புதிய படத்திலும் நடிக்க வைத்துள்ளார். அத்துடன், 'நடிகையின் பர்பாமென்சே அவரை தொடர்ந்து நடிக்க வைக்க காரணம்...' என்று கூறுபவர், கிசுகிசு வெளியாகாமல் இருக்க, பிரமோஷன் நிகழ்ச்சிகளில், நடிகையை விட்டு விலகியே நிற்கிறார்.

சினி துளிகள்!

* சர்வர் சுந்தரம் படத்தின் காமெடியிலிருந்து விடுபட்டு, எமோஷனல் மற்றும் ஆக் ஷன் கதாநாயகனாகியிருக்கிறார், சந்தானம்.

* எஸ்.ஜே.சூர்யாவுடன், நடிகை நந்திதா நடித்துள்ள, நெஞ்சம் மறப்பதில்லை படம், ரிலீசுக்கு தயாராகி விட்டது.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us