தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!

ஜோதிகா நடித்து வெளியான, ராட்சசி படத்தில், அரசு பள்ளிகளின் கல்வி தரம் மற்றும் இந்தியாவில் கல்வியில் எத்தகைய மாற்றங்களை செய்யலாம் என்பது போன்ற விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தன. இந்த படத்தைப் பார்த்த, தென்கிழக்காசிய நாடான, மலேஷிய அமைச்சர், மாஸ்லே மாலிக், ஜோதிகாவின் நடிப்பை பாராட்டினார்.

அத்துடன், 'இந்த படத்தைப் பார்த்த பின், மலேஷிய பள்ளிகளில் கல்வி முறையை மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு படத்தின் கதையும், ஜோதிகாவின் நடிப்பும், என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது...' என, தெரிவித்துள்ளார். இதையடுத்து, மலேஷிய அமைச்சருக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ள ஜோதிகா, 'இது, எங்களுக்கு கிடைத்த வெற்றி...' என்று குறிப்பிட்டுள்ளார்.

- சினிமா பொன்னையா

'நானும் சாவித்ரி தான்'

காக்கா முட்டை படத்தில், இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்ற, ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பின், கதாநாயகியாகி விட்டார். தற்போது, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில், அவரது தங்கையாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், 'பாசமலர் படத்தில், சிவாஜியும், சாவித்ரியும் நடிக்கவில்லையா... அதே மாதிரி தான் இதுவும், அண்ணன் -- தங்கை கதை. அதனால், என்னை சாவித்ரியாக நினைத்துக் கொண்டே, இந்த படத்தில் நடித்தேன். ரசிகர்களும் அப்படியே உணருவர்...' என்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

- எலீசா

குத்துச்சண்டை பயிலும் நடிகை!

உடம்பின் உள்தோற்றம், புறத்தோற்றம் இரண்டையுமே பெண்கள், எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, 'ஜிம்னாஸ்டிக் சென்டர்' நடத்தி வருகிறார், நடிகை ரகுல் பிரீத் சிங். அதோடு, கராத்தே, குத்துச்சண்டை போன்ற தற்காப்பு கலைகளையும், பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப் போகிறாராம். அதற்காக, சில மாதங்களாக, ஒரு மாஸ்டரை நியமித்து, குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.

- எலீசா

அரசியல் கட்சிகளுக்கு கல்லெறியும் ஓவியா!

'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான, ஓவியாவிற்கு எதிர்பார்த்தபடி, சினிமா கை கொடுக்கவில்லை. அதனால், குஷ்பு மற்றும் ரோஜா பாணியில், அரசியலில் நுழைய தயாராகி விட்டார். ஆனால், தன் ஆசையை வெளிப்படுத்தியபோது, சில சிறிய அளவிலான கட்சிகளே அழைத்தன. அதை நிராகரித்த அவர், சில மெகா கட்சிகளில் இணைவதற்காக கல்லெறிந்து வருகிறார். அதற்காக, சில முக்கிய அரசியல் தலைவர்களுடன், அவ்வப்போது சந்திப்பு நடத்துகிறார். எட்டாளம் போனாலும், கிட்டாதது எட்டாது!

- சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

'சோஷியல் மீடியா'க்களில் யாரையாவது வம்பு இழுத்து, பரபரப்பை ஏற்படுத்துவதையே வழக்கமாக வைத்துள்ளார், அந்த நான்கெழுத்து, 'மாஜி ஹீரோ'யின். உச்ச நடிகரின் கட்சியில் பிரசார பீரங்கி பதவி கேட்டு, விண்ணப்பம் போட்டுள்ளார். ஆனால், இதே பதவிக்கு, மூன்றெழுத்து பூ நடிகையும், இன்னொரு பக்கம் கல்லெறிந்து வருகிறார். இதனால், சினிமா வாய்ப்புகளுக்காக நடிகைகள், குடுமிப்புடி சண்டை போடுவது போன்று, இந்த நடிகைகளுக்கு இடையே, அரசியல் கட்சியில் சேருவதிலும் மோதல் வெடித்துள்ளது.

'ஏண்டீ, கஸ்துாரி... நம்ம கல்லுாரியில், மாணவர் தலைவருக்கான தேர்தல் வரப்போகிறது... நீ யார் பக்கம் நிக்க போற...' என்று கேட்டாள், தோழி.

'விளையாட்டிலும், படிப்பிலும் முதலாவதாக வரும், நிரஞ்சனியை ஆதரித்து, வேலை செய்யப் போறேன்...' என்றாள், கஸ்துாரி.

சினி துளிகள்!

* தமிழ்ப்படம்-2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய கஸ்துாரி, தற்போது, தமிழரசன் படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தலைவி படத்திற்காக, பரதநாட்டியம் பயிற்சி எடுத்துள்ளார், கங்கனா ரணாவத்.

* மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில், 12 பாடல்கள் இடம்பெறுகின்றன.

* பிகில் படத்திற்காக, முதன்முதலாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடியுள்ளார், விஜய்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us