தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அவசரத்தை விடுவோம்; அல்லல்கள் நீங்கும்!

அவசரத்தை விடுவோம்; அல்லல்கள் நீங்கும்!

அவசரத்தை விடுவோம்; அல்லல்கள் நீங்கும்!


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப, எதிலும் அவசரம் இல்லாமல், நிதானமாக செயல்பட்டால், எடுத்த காரியத்தில் வெற்றியடையலாம்.

சீடனுடன் காட்டு வழியாகப் போய் கொண்டிருந்தார், ஓர் அந்தணர். அவருக்கு விசேஷமான மந்திரம் ஒன்று தெரியும். ஆண்டுதோறும், குறிப்பிட்ட நிலையில், நவக்கிரகங்கள் ஒன்று சேரும்போது, அந்த மந்திரத்தைச் சொன்னால், ஆகாயத்தில் இருந்து பொன்னும், மணியும் கொட்டும்.

அன்று, சீடனும், அந்தணரும் காட்டுப் பாதையில் போய்க் கொண்டிருந்த போது, கள்வர் கூட்டம் ஒன்று அவர்களை வழி மறித்தது. அந்த வழியாக வருவோரை பிடித்து வைத்து, பணம் பெற்ற பின், விடுதலை செய்வது, அக்கும்பலின் வழக்கம்.

அந்தணரையும், சீடரையும் அக்கும்பல் பிடித்து வைத்தது. அதனால், 'குருநாதா... நான் போய் இவர்கள் கேட்கும் பணத்தைக் கொண்டு வருகிறேன்...' என்றான் சீடன். அதனால், அவனை மட்டும் விடுவித்தது, கள்வர் கும்பல்.

'நீ போக வேண்டாம்... இன்று மாலை, கிரகங்கள் எல்லாம் ஒன்று சேரும் நேரத்தில், நான் மந்திரம் சொன்னால், வானத்தில் இருந்து தங்கமும், வைரமுமாகக் கொட்டும்; அதை, இவர்களிடம் கொடுத்து விட்டு நாம் சென்று விடலாம்...' என்றார், அந்தணர்.

'வேண்டாம் குருநாதா... இவர்கள் முன் அந்த மந்திரத்தை ஜபிப்பதால் ஆபத்து தான் வரும்; மந்திரத்தை ஜபிக்காதீர்கள்... நான் போய், பணத்தைக் கொண்டு வருகிறேன்...' என்று சொல்லி, போய் விட்டான்.

அந்தணரால் சும்மாயிருக்க முடியவில்லை; அந்தி சாய்ந்தது, சந்திரன் உதித்ததும், அவர் எதிர்பார்த்தபடி, நவக்கிரகங்கள் ஒருநிலைக்கு வந்தன. அங்கிருந்த நதியில் நீராடி, கையோடு கொண்டு வந்திருந்த மடி வஸ்திரங்களை உடுத்தி, மந்திரத்தை ஜபித்தார், அந்தணர். வானில் இருந்து தங்கமும், வைரமும் கொட்டின.

அதைப் பார்த்த கள்வர் கூட்டம், அனைத்தையும் எடுத்து, மூட்டையாகக் கட்டியது. அச்சமயம், இவர்களை விட பலசாலிகளான மற்றொரு கள்வர் கூட்டம் அங்கு வந்து, 'மூட்டையைக் கொடுத்து விட்டு, ஓடிப்போய் விடுங்கள்...' என, மிரட்டியது.

'இந்த அந்தணர் தான், மந்திரத்தின் மூலம் தங்கமும், வைரமுமாக வரவழைத்துக் கொடுத்தார். இவரிடமிருந்தே நீங்கள் பெறலாமே...' என்றனர், அந்தணரை சிறைப்பிடித்த கள்வர்கள்.

அந்தணரோ,'ஆண்டுக்கு ஒருமுறை, விசேஷமாக, நவக்கிரகங்கள் சேரும்போது தான், அந்த மந்திரம் பலிக்கும்; இப்போது, இரண்டாம் முறையாகப் பலிக்காது...' என்றார்.

மந்திரம் பலிக்காது என்பது தெரிந்தவுடன், அந்தணரைக் கொன்று விட்டது, கள்வர் கும்பல்.

அதன்பின், இரு கும்பலும் தங்கத்திற்காகச் சண்டை போட்டு, மடிந்தனர்.

இரண்டு நாட்களுக்கு பின், மீட்புத் தொகையுடன் வந்த சீடன், கள்வர் கூட்டத்துடன், தன் குருநாதரான அந்தணரும் இறந்து கிடப்பதைப் பார்த்து, 'அவசரப்படாதீர்கள்... மந்திரத்தை உபயோகப் படுத்தாதீர் என்று பலமுறை சொல்லியும், கேட்கவில்லையே... அவசரம், ஆயுளையே முடித்து விட்டதே...' என்று, மனம் வருந்தி, திரும்பினான்.

தப்புவதற்கு வழியிருந்தும், அதை அலட்சியப் படுத்தி, அவசரமாகச் செயல்படுவதன் விளைவை பார்த்தீர்களா...

போதி சத்துவரின் முற்பிறவிக் கதைகளில் ஒன்று இது!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

கொடி மரத்தின் பொருள் என்ன?

அசுரர்களை அகற்றவும், சிவ கணங்கள் மற்றும் தேவர்களை அழைக்கவும், ஆலயத்தை காக்கவும், பக்தர்களை பாதுகாக்கவும் கொடி மரம் நிறுவப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us