PUBLISHED ON : ஜன 06, 2013

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி, தற்போது ஹாலிவுட் நடிகைகளிலேயே முன்னணியில் இருப்பவர். இவர் நடித்து, Œக்கைப்@பாடு @பாட்ட, 'Œõல்ட்' படத்தில், ரகசிய பெண் உளவாளியாக நடித்து, மயிர் கூச்செறியும் ஸ்டன்ட்கள் செய்து அசத்தி இருப்பார். இங்கு படத்தில் இருப்பவர் இஷா குப்தா. செதுக்கிய சிலை போன்ற உடல் அமைப்புள்ள இஷா, 99 சதவீதம், ஏஞ்ஜலினா ஜோலி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வர். ஹாலிவுட் நடிகையைப் போலவே இருக்கிறார் என்று கூறுவதை விட, தன் தாய் போல இருக்கிறார் என்று சொல்லப்படுவதையே பெருமையாக கருதுகிறார், மிஸ் இந்தியா பட்டம் பெற்றவரான இஷா, ஜன்னத் -2 என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். தன் பெற்றோரின் இனிஷியல் களை தன் இடது கை மணிக்கட்டில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார், சில மாதங் களில் ஜன்னத் -2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும், அடுத்து, சட்டம் படித்து, வக்கீலாக ஆவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார். படம் இன்னும் முடியாததால், வக்கீல் ஆசை தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
— ஜோல்னா பையன்.
