தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உழைப்பால் உயர்ந்தவர்!

உழைப்பால் உயர்ந்தவர்!

உழைப்பால் உயர்ந்தவர்!


PUBLISHED ON : நவ 04, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தின் வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி!

சென்ற இதழ் தொடர்ச்சி...

வருமானவரித்துறையில், வருமான வரி உதவி ஆணையராக சென்னையில் வேலை கிடைத்தது. 1980-87 சென்னை; 1987-95 ஜாயின்ட் கமிஷனராக பெங்களூரில், 1995-2004 ஐதராபாத்தில், 2001 கமிஷனராக பதவி உயர்வு. 2004-07 சென்னை, 2007-09 அலகாபாத், 2009-11 பாண்டிச்சேரி, 2011 வருமான வரி முதன்மை ஆணையராக பதவி உயர்வு முதலில் திருச்சி; செப்., 11,2011ல் சென்னை.

பெங்களூரில் நான் பணியாற்றிய போது, என் தங்கை செண்பக வள்ளிக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரை மணக்கும் இளைஞருக்கு, பிரான்ஸ் நாட்டில் வேலை. எனவே, திருமணமாகி அங்கு போவதற்குள், பிரெஞ்சு மொழி கற்க கூறினர். என் தங்கையை பெங்களூரில், 'அலையான்ஸ் பிரான்சேஸ்'ல் சேர்த்தேன். அப்போது, எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அவருடன் நானும் பிரெஞ்ச் படிக்க ஆரம்பித்தால் என்ன? காலை 7.30 மணி முதல், 9 மணி வரை, நான் பிரெஞ்ச் வகுப்புக்குச் சென்றேன். பின்னர், வருமான வரி அலுவலகம்.

தங்கை அதே இடத்தில், மாலை நேர வகுப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு முடிவதற்குள், தங்கை திருமணமாகி, பாரிஸ் நகருக்கு சென்று விட்டார். நான் பிரெஞ்ச் படிப்பை தொடர்ந்தேன். முதல் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, நான்காம் ஆண்டு டிப்ளமோ ”ப்பீரியர், ஐந்தாம் ஆண்டு ஸ்போக்கன் பிரெஞ்ச்.

பிரெஞ்ச் படிப்பது, எனக்கு கஷ்டமாக இருக்கவில்லை. வெளிநாட்டு மொழியை கற்றுக் கொள்ள, அடிப்படை ஆர்வம், பாடம் நடத்தப்படும் போது முழு கவனம், வீட்டில் சற்று அதிக உழைப்பு இவையே போதும். பிரெஞ்ச் மொழியில் உச்சரிப்பு, கொஞ்சம் கஷ்டம்; அதிக கவனம் தேவை. என் வகுப்பில் இருந்த, 20 பேரில் அநேகம் பேர், கல்லூரி மாணவ மாணவியர். ஒரு சிலர், பணிபுரியும் பெண்கள், குடும்பத் தலைவிகள்.

அவர்களை விட, நான் வயதில் பெரியவன் என்பது, எனக்குள் எந்த தாழ்வுமனப்பான் மையையும் ஏற்படுத்தவில்லை. 'பிரெஞ்ச் பழகச் சொல்கிறோம். அவர்களும் பழகுகின்றனர்; அவ்வளவு தான்...' என்று நினைத்துக் கொண்டேன். சில நாட்களிலேயே, எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது.

அப்போது எனக்கு, எதிர்பாராத மற்றொரு வாய்ப்பும் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும், பிரெஞ்ச் நாட்டு அரசாங்கம் பல்வேறு நாடுகளிலிருந்து, பிரெஞ்ச் மொழி நன்றாக தெரிந்த, அரசு உயர் அதிகாரிகளில், ஐந்து பேரை தங்கள் நாட்டுக்கு அழைத்து, 15 மாதங்கள் பயிற்சி அளிக்கும்.

பிரான்சுக்கு செல்பவர்களை தேர்ந்தெடுக்க, டில்லியில் ஒரு பரீட்சை நடத்துகின்றனர். அரசுப் பணியில், கிளாஸ் ஒன் அதிகாரிகள் மட்டும் தான், இதற்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களும், 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். எனக்கு, எல்லா தகுதிகளும் இருந்ததால், நானும் அதற்கு விண்ணப்பித்தேன்.

பிரெஞ்ச் மொழியில் ஆளுமை குறித்து, டில்லியில் பரீட்சை வைத்தனர். இந்தியாவின் பல பாகங்களிலிருந்து, கிளாஸ் ஒன் அதிகாரிகள் பரீட்சை எழுதினர். ஐந்து பேர்களை தேர்ந்தெடுத்தனர். ஏப்ரல், 1993லிருந்து, 1994 ஜூன் வரை, 15 மாதங்கள் பிரான்சில் பயிற்சி. உலகத்தின் பல நாடுகளிலிருந்து, 100 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிரான்ஸ் வந்தனர். பாரிஸ் நகரிலிருந்து, 300 கி.மீ.,தெற்கில் விஷி என்ற சிறிய நகரத்தில், முதல் நான்கு மாதங்கள் அட்வான்ஸ் பிரெஞ்ச் படித்தோம்.

இரண்டாவது உலகப்போரின் போது, ஹிட்லர் பாரிஸ் நகரை ஆக்கிரமித்துக் கொண்ட சமயம், பிரெஞ்ச் தேசிய அரசாங்கம், விஷியிலிருந்து தான் செயல்பட்டது.

பிறகு பாரீஸ் நகரில், பிரெஞ்ச் நாட்டு வரிச்சட்டங்கள், அரசு நிதி நிர்வாகம் பார்த்து, பத்து மாதங்கள் பயிற்சி தரப்பட்டது. வெளியே தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், செலவுக்கு என்று தினமும், பணம் கொடுத்தனர். என் தங்கை சண்பகவள்ளியுடன், அவர் வீட்டில் தங்கி சாப்பிட்டதால், என்னால், கொஞ்சம் பணம் மிச்சமாக்க முடிந்தது.

'வருமான வரித்துறை என்று இல்லாது, வேறு எந்த துறைக்கு நான் சென்றிருந்தாலும், அங்கும் என் நேர்மையான உழைப்பால், உயர்ந்த நிலைக்கு வந்திருப்பேன் என்று என்னால் சொல்ல முடியும். நம் முயற்சி, 80 சதவீதம்; அதிர்ஷ்டம் 10 - 20 சதவீதம் என்று சொல்லலாம். இந்த நிலைக்கு நான் உயர்ந்தது, என் பெற்றோர் செய்த புண்ணியமும், அவர்கள் கற்றுக் கொடுத்த நல்லொழுக்கமும் தான்.

ஐதராபாத்தில், நான் ஜாயின்ட் கமிஷனராக பணி ஆற்றிய போது, 21 அறங்காவலர்கள் கொண்ட, ஒரு பிரபல அறக்கட்டளைக்கு பெரிய தொகை, வருமான வரித்துறையிலிருந்து திருப்பித் தரும்படி கேட்டனர். அதில், 4 பேர் தவிர, மற்ற 17 - அறங்காவலர்கள், வருமான வரித்துறைக்கு பெரிய பெரிய தொகைகள் கேட்கும் ரீ-பண்டை விட அதிகமாக வரி பாக்கி இருந்தது. எனவே, நான் ரீ - பண்டை, தருவதற்கு மறுத்து விட்டேன். எனக்கு, மேல் அதிகாரி முதன்மை கமிஷன், என்னை அழைத்து, 'ரீ - பண்டை கொடுத்து விடுங்கள்' என்றார். நான் காரணங்களை விளக்கி, அது சாத்தியமல்ல

என்று சொன்னேன்.

ரீ - பண்டை, கொடுக்கத் தான் வேண்டும் என்று, மேலதிகாரி எழுத்து மூலம் எனக்கு உத்தரவு பிறப்பித்தார் ; அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஐதராபாத்திலிருந்து, எனக்கு சென்னைக்கு மாறுதல் வந்து, நான் சென்னைக்கு வந்து விட்டேன். அதே மேலதிகாரி, அந்த ரீ- பண்ட் பிரச்னையால், என், பணி ரிகார்டில் மிகவும் பாதகமாக எழுதி விட்டார். அது கூட எனக்குத் தெரியாது.

ஆனால், எங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள நேர்மையான மேலதிகாரி, பல ஆண்டுகளாக நான் செய்திருந்த சிறந்த பணிகளையும், என் மேலதிகாரிகள் தொடர்ந்து என்னை பாராட்டியிருப்பதையும், ரீ - பண்ட் தர மறுத்த காரணங்களையும் படித்து, விசாரித்து, என் மேலதிகாரி எழுதிய பாதகமான குறிப்புகளை, என் பைலிலிருந்து நீக்கி விட்டார். என் நேர்மைக்கு கிடைத்த பரிசாக, நான் இதை பார்க்கிறேன்.

— முற்றும் —

எஸ். ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us