PUBLISHED ON : ஜூலை 12, 2015

அ நிறம் | அளவு
பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான மடோனாவுக்கு, 56 வயதாகி விட்டது. இதனால், பாடுவதை கைவிட்டு, ஓய்வெடுக்க செல்வார் என்று எதிர்பார்த்தால், அதிரடியாக, தன், 13வது ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 'ரிபெல் ஹார்ட்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பத்தில், ரசிகர்களுக்கு, தன்னைப் பற்றி சொல்வது போன்ற ஒரு பாடலை பாடியுள்ளவர், அப்பாடலில், 'பெண்களை போகப் பொருளாக கருத வேண்டாம்; அவர்களுக்கும் உணர்வு உள்ளது...' என, பொங்கித் தீர்த்துள்ளார்.
— ஜோல்னாபையன்.
