sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/பெற்றோருக்கு பெருமை சேருங்கள்!

பெற்றோருக்கு பெருமை சேருங்கள்!

பெற்றோருக்கு பெருமை சேருங்கள்!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப். 22 - நாவுக்கரசர் குருபூஜை

குழந்தைகள், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாவுக்கரசரின் வாழ்க்கையே உதாரணம்.

கடலூர் மாவட்டம், திருவாமூரில், புகழனார்  - மாதினியார் தம்பதிக்கு, தேவாரம் பாடிய நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது சகோதரி திலகவதியார். நாவுக்கரசருக்கு பெற்றோர் வைத்த பெயர் மருள்நீக்கியார். இளமையிலேயே பெற்றோர் இறந்துவிட. சகோதரியின் பாதுகாப்பில் வளர்ந்தார், மருள்நீக்கியார். உறவினர்கள், அவ்வூரில் சேனைத்தலைவராக இருந்த கலிப்பகையாருக்கு, திலகவதியை திருமணத்திற்கு நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார், போரில் கொல்லப்பட்டார்.

இதனால், மனம் வருந்திய திலகவதி, திருவதிகை என்ற ஊரிலுள்ள சிவன் கோவிலில் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருநாவுக்கரசரோ, சமண சமயத்திற்கு மாறி, தர்மசேனர் என பெயர் சூட்டிக்கொண்டார். தன் தம்பி சைவ சமயத்திற்கு மீண்டும் திரும்பி வர வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார், திலகவதியார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது.

மெய்சிலிர்த்த அவர், 'திருப்பதிகம்' பாடி வழிபட்டார். அந்தப் பாடலில் மனம் உருகிய சிவன், அவருக்கு காட்சியளித்து, 'நாவுக்கரசு' என பட்டம் சூட்டினார். அந்தப் பட்டமே அவரது பெயராக நிலைத்து விட்டது. பல தலங்களுக்கு சென்று தேவாரம் பாடிய நாவுக்கரசர், திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். அந்நாளில், அவருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.

திருவதிகையில், உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில், நாவுக்கரசருக்கு சன்னிதி இருக்கிறது. அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதி, வாக்கு வன்மை மற்றும் கல்வி அபிவிருத்தி கிடைக்கும். இக்கோவிலில் சிவனை விட நாவுக்கரசருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இவர், பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்ததால், அன்று, அவருக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது.

நாவுக்கரசரின் பெற்றோர் மற்றும் சகோதரி திலகவதியாருக்கும், இங்கு சன்னிதிகள் உள்ளன. பிள்ளைகள், பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவ்வகையில், தங்கள் ஆன்மிகப்பணியால் திலகவதியாரும், நாவுக்கரசரும் தங்கள் பெற்றோருக்கு, கோவிலில் சன்னிதி அமையும் அளவு பெருமை சேர்த்துள்ளனர். இதே போல் பிள்ளைகள் அவரவர் துறைகளில் முன்னேறி, பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தை, அதிசய மரமாக கருதி, மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ இல்லாமல் புது அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவையும் உள்ளது. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி சென்று, அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ளது, இக்கோவில்.



தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us