தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாருங்கள் பறவையாகலாம்!

* இலையுதிர் கால

மரங்கள் என

பயணங்களை உதிர்த்து நிற்கும்

மனிதர்களாகி விட்டோம்!

* கோவில் திருவிழாவென்று

கூடிக்குலவ போய் வந்த

கொண்டாட்டப் பயணங்கள்

காணவில்லை இன்று!

* கோடை விடுமுறையென்று

தேடிப்போய் உறவை வளர்த்த

தித்திக்கும் பயணங்களோ

இன்று தென்படவில்லை!

* விருந்து விசேஷமென்று

அன்போடு அழைப்பு விடுக்கும்

மகிழ்வான பயணங்களோ

அருகிவிட்டன!

* கனவு வந்ததென்று

காண நாடிச் சென்ற

கலங்க வைக்கும் பயணங்களும்

மறைந்து விட்டன!

* எங்கேயும் எப்போதும்

இறகுகளை உதிர்ப்பதை போல

பயணங்களை உதிர்ப்பதில்லை

பறவைகள்!

* வாழ்வில் மகிழ

மகிழ்ந்தே வாழ

வாருங்கள் பறவையாகலாம்

நாமும் பயணம் போகலாம்!

- வ.முருகன், பாப்பனப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us