PUBLISHED ON : நவ 27, 2011

கடந்த, 1950களில் ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர், பிரபல நடிகை மர்லின் மன்றோ. உலகின் அப்போதைய இளைஞர்களின் உதடுகள் அதிகம் முணுமுணுத்தது அம்மணியின் பெயராகத்தான் இருக்கும். இவர் நடித்த பல படங்கள், ஏன், எதற்கு என்ற காரணம் எதுவும் இல்லாமலேயே, 'பாக்ஸ் ஆபீஸ் ஹிட்' ஆயின. ஆனாலும், இவர் நடித்த, 'ரிவர் ஆப் நோ ரிடர்ன்' என்ற படம், பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சிக்கு, மர்லின் மன்றோ அணிந்திருந்த பச்சை நிற உடை, அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சமீபத்தில், சீனாவில் அந்த உடை, ஏலம் விடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், இந்த உடையை, 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, தனக்கு புண்ணியம் (?) தேடிக் கொண்டுள்ளார்.
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்...' பழமொழி, யானைக்கு மட்டும் அல்லாமல், மர்லின் மன்றோவுக்கும் பொருந்தும் போல் இருக்கிறது.
— ஜோல்னா பையன்.
