PUBLISHED ON : ஜன 15, 2017

அ நிறம் | அளவு
டில்லியில், வி.ஐ.பி.,கள் சங்கமமாகும் இடத்தில், வெள்ளை நிறத்தில், மெக்சிகோ தேசியக்கொடி பறக்கும், ஆட்டோ ஒன்றை காணலாம். இது, மெக்சிகோ அம்பாசிடர், மெல்பா பிரயாவின் வாகனம். இவர், எங்கு சென்றாலும் ஆட்டோவிலேயே பயணம் செய்கிறார். சில இடங்களில், 'ஆட்டோ உள்ளே வரக்கூடாது...' என்ற, 'போர்டு' இருந்தால், இறங்கி நடந்து செல்கிறார். சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூர் பிரதமர், லீ ஹசீன் லுங் டில்லி வந்த போது, தன் அதிகாரிகளுடன், பேருந்தில் பயணித்தார். இவர்களிடமிருந்து நம் அரசியல்வாதிகள் எப்போது தான் எளிமையை கற்றுக் கொள்வரோ!
— ஜோல்னாபையன்
