PUBLISHED ON : ஜூன் 28, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குத்துச் சண்டை போட்டியில், உலக சாம்பியன் பட்டத்தை பெற்றவரும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவருமான மைக் டைசன், ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தார்.
போட்டிகளின்போது, ஒரு சில குத்துகளிலேயே எதிராளிகளை சாய்ப்பது, இவரின் ஸ்பெஷல். ஆனால், கற்பழிப்பு, தகராறு மற்றும் போதை மருந்து போன்ற பிரச்னைகளில் சிக்கி, தன் புகழை இழந்தார்.
ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்தாலும், அது, அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்துள்ளார்.
புரூஸ் லீயின் குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும், 'இப் மேன் 3' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் டைசன். இந்த அவதாரமாவது, டைசனுக்கு கை கொடுக்குமா என, பார்க்கலாம்.
— ஜோல்னாபையன்.