PUBLISHED ON : ஜூன் 28, 2015

மதங்களின் பெயரால் ஆயுதம் ஏந்தும் இக்காலத்தில், மத வேற்றுமை பாராமல், தங்கள் கடமையை செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர் மனித நேயமுள்ளவர்கள்.
கோழிக்கோட்டை சேர்ந்தவர் கே.கே.முகமது. இவர், போபாலில் ஆர்கியாலஜி சூப்பிரண்டாக பணியாற்றிய போது, கொள்ளையர்கள் நிறைந்த சம்பல் பிரதேசங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, 200க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழியும் நிலையில் இருப்பதைக் கண்டார். அக்காடுகளில் கொள்ளையர்கள் அதிகம் இருப்பதால், பக்தர்களும் கோவில்களுக்கு வருவதில்லை.
இதனால், இடிந்த நிலையில் காணப்பட்ட கோவில்களை பார்த்து மன வேதனை அடைந்தவர், 'எப்படியும் இக்கோவில்களை புதுப்பிக்க வேண்டும்...' என்று முடிவு செய்து, தீவிரமாக செயல்பட துவங்கினார்.
தற்போது, 80 கோவில்கள் இவரின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
— ஜோல்னாபையன்.

