
பொது கழிப்பறை என்றால், நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் முகம் சுளிக்கும் வகையில் தான் இருக்கும். கிழக்காசிய நாடான ஜப்பானில் கேட்கவே வேண்டாம். சுகாதாரம், பராமரிப்பு மிக மோசமாக இருக்கும்.
இந்த போக்கை மாற்றுவதற்காக, ஜப்பான் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
டோக்கியோ நகரில், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடியிலான இந்த கழிப்பறைகளை, வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.
மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படும் இந்த கழிப்பறைக்குள் உள்ளே சென்று, விளக்கை அணைத்து விட்டால், உள்ளே நடப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது.
கழிப்பறையில் இருந்தவர்கள் வெளியே வந்து விட்டால், வெளியில் இருப்பவர்களால், கழிப்பறையை பார்க்க முடியும்.
பொதுக் கழிப்பறை என்றால், மக்கள் ஓட்டம் பிடிப்பர் என்பதற்காக, வெளியில் இருந்து பார்க்கும்போது, சுத்தமாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த கண்ணாடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறைகளின் சுகாதாரத்தைப் பார்த்து, அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
ஜோல்னாபையன்