PUBLISHED ON : செப் 06, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வசிக்கும், ஜெலினா, 75, என்ற பெண், வய்ச்சாஸ்லவ் என்ற, 52 வயதான நபரை திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பரபரப்புக்கு காரணம், இவர்களது வயது வித்தியாசமல்ல. ஜெலினாவின் மகள் எலினாவின், முன்னாள் கணவர் தான், வய்ச்சாஸ்லவ்.
எலினாவுக்கும், வய்ச்சாஸ்லவுக்கும் திருமணமாகி, மூன்று ஆண்டுகளிலேயே தகராறு ஏற்பட்டு, விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனால், தன் மருமகனுக்கு அடைக்கலம் தந்ததுடன், அவரையே திருமணமும் செய்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார், ஜெலினா.
'என்னையும், வய்ச்சாஸ்லவையும் பிரிக்க, என் மகள் சதி செய்கிறாள்.அவளின் சதியை முறியடிக்கும் சக்தி, எங்கள் காதலுக்கு உண்டு...' என்கிறார், ஜெலினா.
ஜோல்னாபையன்

