
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னை மர உச்சியில் உட்கார்ந்திருப்பவர், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகளின் தாய், ஷீஜா. கேரள மாநிலம், கண்ணவம் கிராமத்தை சேர்ந்தவர். கள் எடுக்கும் தொழிலாளியான, கணவர் ஜெயக்குமார், பைக் விபத்தில் செயலிழந்த நிலையில், குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்றறியாமல் தவித்தார், ஷீஜா.
இதையடுத்து, கணவரிடம் அனுமதி பெற்று, தென்னை மரத்தில் ஏறி, கள் எடுக்க துவங்கினார். இப்போது, ஆண்களுக்கு சமமாக, தென்னை மரத்தில் ஏறி, கள் எடுத்து வந்து, கள் கொள்முதல் செய்யும் கூட்டுறவு மையத்தில் கொடுத்து, கூலி வாங்கி, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
ஜோல்னாபையன்

