PUBLISHED ON : ஜன 28, 2018

அ நிறம் | அளவு
கனடா நாட்டில், நோவா ஸ்கோடியா என்ற மாகாணம் உள்ளது. இங்கு வசிக்கும், கியூனியா புக்கர் என்ற பெண்ணுக்கு, 40 வயதாகிறது.
இவருக்கு, 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்களும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால், அவரது தோற்றம், அவரது மகள்களை விட இளமையாக காட்சியளிப்பது தான், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
'என் மகள்களுடன் வெளியில் சென்றால், 'இந்த பொண்ணுங்களுக்கு நீங்க அம்மாவா... நம்பவே முடியவில்லையே... அவங்களோட தங்கச்சி மாதிரி இருக்கீங்க...' என, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்; இது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...' என்கிறார் கியூனியா.
இவர் தன் மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட, இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
— ஜோல்னாபையன்.
