PUBLISHED ON : டிச 28, 2014

மூன்று பிரபல நடிகைகளை கோடம்பாக்கத்துக்கு அளித்த, நட் சத்திர தாய்க்குலம் விஜயலட்சுமி, தான் சந்தித்த துயரங்களை பற்றி கூறுகிறார்: 32வது வயதில் கணவரை இழந்து, ஐந்து குழந்தைகளுடன் வாழ்க்கையில் போராடினேன். மகள்கள், நடிகைகள் ஆன போது தான், வாழ்க்கை மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இரண்டு ஆண் பிள்ளைகளை இழந்த போது ஆடிப் போனேன். ஒருவன், 17 வயதில் தற்கொலை செய்து கொண்டான். மற்றவன், சாலை விபத்தில் மரணமடைந்தான்...' என்று தன் துயரத்தை பற்றி கூறினார். நடிகைகள் கலாரஞ்சனி, கல்பனா மற்றும் ஊர்வசியின் தாயார் தான் இந்த தாய்க்குலம். மகள்கள் மூவரும் விவகாரத்து பெற்ற போது, விஜயலட்சுமி மீண்டும் துயரமடைந்தார். இவர்களில், ஊர்வசி வேறு ஒருவரை மறுமணம் செய்து, ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டது, கொஞ்சம் மனநிறைவை தருவதாக கூறுகிறார் இவர்.
— ஜோல்னாபையன்.
