PUBLISHED ON : டிச 28, 2014

அ நிறம் | அளவு
ஒருவர் மரணமடைந்தால் அது கொலையா, தற்கொலையா என்பதை நூற்றாண்டுகள் பல கடந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஒருவரின் உடல், 2011ல் அயர்லாந்தில் காஷல் என்ற இடத்தில் கிடைத்தது. சேறும், சகதியும், எண்ணெயும் கலந்த இடம் அது. இங்கு கிடைத்த பழமையான உடலை பரிசோதித்து பார்த்த போது, 'அது கொலை செய்யப்பட்ட உடல்...' என்று தெரிய வந்தது. பலரால் மிதித்து, சேற்றுக்குள் புதைந்து போனதும் தெரிய வந்தது. காஷல் பிரதேசத்தில் கிடைத்த இந்த உடலுக்கு, 'காஷ்ல் மேன்' என்று பெயர் சூட்டி இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சேறுடன், கறுப்பு எண்ணெயும் கலந்து இருந்ததால் தான், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் உடல் முழுவதுமாக அழியவில்லை.
— ஜோல்னாபையன்.
