PUBLISHED ON : ஏப் 22, 2018

அ நிறம் | அளவு
உலகம் முழுவதும் அழகி மற்றும் ஆணழகன் போட்டிகள் நடப்பதும், அவற்றில் வெற்றி பெறுவோர், கோடீஸ்வரர்களாவதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால், ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் வசிக்கும், வில்லியம் மஸ்வினு என்பவர், தன் அழுக்கான தோற்றத்தின் மூலம், கோடீஸ்வரராகி விட்டார்.
ஜிம்பாப்வேயில், ஆண்டு தோறும், 'மிஸ்டர் அழுக்கு மனிதர்' என்ற போட்டி நடப்பது வழக்கம். இதில், அழுக்கான தோற்றத்துடன் இருப்பவர்கள் பங்கேற்பர்.
இதில், தொடர்ச்சியாக நான்கு முறை பட்டம் வென்று, அதன் மூலம், பல கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ள வில்லியம், 'இந்த அழுக்கு தோற்றத்துக்காக, நான் சந்தித்த அவமானங்கள் அதிகம்...' என, குறிப்பிடுகிறார்.
— ஜோல்னாபையன்.
