sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மேதைகள் வாழ்விலே...' நூலிலிருந்து: மேதை ஐன்ஸ்டினின் மனைவி எல்ஸாவிற்கு, அவருடைய ஆராய்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர், தன் ஆராய்ச்சி கூடத்திலிருந்து வெளியே வரும் போது, சுற்றுலகத்தை பற்றியும், மேஜையில் இருக்கும் அவரது உணவைப் பற்றியும் அவருக்கு மெல்ல உணர்த்தி, இந்த உலகிற்கு கொண்டு வருவதற்குள் எல்ஸாவிற்கு பெரும்பாடாகி விடும்.

ஒருநாள், ஆராய்ச்சி கூடத்திலிருந்து அவர், வெளியே வந்த போது, 'உங்க ஆராய்ச்சியை பற்றி எல்லாருமே ரொம்ப பிரமாதமாக பேசுறாங்க. எனக்கு அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு சொல்ல வெட்கமாக இருக்கு. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...' என்றாள் எல்ஸா.

'நீ கவலைப்படாதே... யாராவது உன்னிடம் அதைப்பற்றி கேட்டால், 'எனக்கு எல்லாமே தெரியும். ஆனால், அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு என் கணவர் சொல்லியிருக்கிறார்ன்னு சொல்லி விடு...' என்றாராம் ஐன்ஸ்டின்!

அப்துற் ரகீம் எழுதிய, 'வாழ்க்கையில் வெற்றி' நூலிலிருந்து: உங்கள் லட்சிய புருஷர்களைப் பற்றிய நூல்களை படித்து, அவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள், எந்த நல்லியல்புகளால் வாழ்க்கைப் போரில் வெற்றி கண்டனர் என்பதை உணர்ந்து, அவற்றை, உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடியுங்கள். உங்களுடைய லட்சிய புருஷர்கள் பற்றிய நூல்கள், உங்களுக்கு உணர்ச்சி யூட்டி, ஊக்கத்தை அளிக்கும் என்பது திண்ணம். அவையே உங்களை பண்படுத்தி, உங்களுக்கு வெற்றி மாலை சூட்டும்; இது உலகறிந்த உண்மை.

பைபிளையும், டால்ஸ்டாயின் நூல்களையும் படித்ததால் தான், காந்திஜி மகாத்மாவானார். நெப்போலியனின் ராணுவ வரலாறல்லவோ முஸ்தபா கமாலை, 'அட்டாதுர்க்' ஆக்கியது. எதிர்பாரா வண்ணம், தாம் பார்த்த ஹனிபாலின் வரலாறு தான், ஐசன்ஹோவரின் வாழ்க்கையையே மாற்றியமைத்து, அவரைப் பெரும் தளபதியாக்கியது.

காரல் மார்க்சின் மூலதனமே, சமதர்ம ரஷ்யாவை உருவாக்க லெனினுக்கு காரணமாக இருந்தது. 'வெள்ளை மாளிகையின் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் ஆப்ரகாம் லிங்கனின் உருவப்படம் தான், நான் சோர்வுற்ற சமயங்களில் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊட்டியது...' என்று தியோடர் ரூஸ்வெல்ட் அடிக்கடி வியந்து கூறுவார்.

ஆகவே, நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமாயின், உங்களுடைய லட்சிய புருஷர்கள் காட்டிச் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவர்களுடைய நல்லியல்புகளை, உங்களுடைய நல்லியல்புகளாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

'உலகப் பிரபலங்கள்' நூலிலிருந்து: அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த ரூஸ்வெல்ட், 1923ல் நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய கம்பெனியில், முக்கிய அதிகாரியாக இருந்தார். சினிமாவுக்கு கதை எழுதி, புகழ் பெற வேண்டுமென்ற ஆசையால், ஒரு கதை எழுதி, 'பாரமவுண்ட் பிக்சர்ஸ்' என்ற பிரபல பட கம்பெனிக்கு அனுப்பினார். கதை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தவள் ஜேன் வெஸ்ட் என்ற பெண்மணி. ரூஸ்வெல்ட் அனுப்பிய கதை, திருப்தியாக இல்லாததால், திருப்பி அனுப்பி விட்டாள். இதனால், மிகுந்த வருத்தமடைந்தார் ரூஸ்வெல்ட்.

அமெரிக்க கடற்படை அதிகாரி, கேப்டன் வால்டன் என்பவரை மணந்தாள் ஜேன்வெஸ்ட். 15 ஆண்டு களுக்கு பின், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆன ரூஸ்வெல்ட், கேப்டன் வால்டனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். கேப்டனுடன் வந்திருந்த ஜேனை, ஜனாதிபதி அடையாளம் கண்டு கொண்டார்.

'உங்க கதையை ஏற்றுக் கொள்ளாமல் போனோமே என்று அச்சினிமா கம்பெனியினர் இப்போது வருந்துகின்றனர்...' என்றாள் ஜேன்.

'என் கதையை மட்டும், அப்போது அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இப்போது நாம் ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க முடியுமா...' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ரூஸ்வெல்ட்.

நம் முயற்சி, ஒரு துறையில் தோற்றுவிட்டால், அத்துடன், நம் வாழ்வு முடிந்து விடப் போவதில்லை என்ற பாடத்தை அவர் உணர்ந்திருந்ததால் தான், அடுத்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, ஜனாதிபதியாகும் அளவுக்கு உயர்ந்தார்.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us