
உத்ரகண்ட் மாநிலம், நைனிடால் நகரத்தில், முக்தேஸ்வர் என்ற கோடை வாசஸ்தலம் அமைந்துள்ளது. இதை சுற்றி இமய மலை பகுதிகளும், பள்ளத்தாக்குகளும் அமைந்துள்ளதால், இயற்கையை ரசிக்க, மிகச்சிறந்த இடம்.
இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான சிகரமான, நந்தா தேவியை, இங்கிருந்து கண் குளிர பார்த்து ரசிக்கலாம். கோடை காலத்திலேயே, அவ்வப்போது மழை பெய்யும்; மழை காலத்தில், ஜமாய்க்கும்; குளிர் காலத்தில், வெப்பம், '0' டிகிரியை தாண்டும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், பனி பொழிவு சூப்பராக இருக்கும். மலை ஏறுதல், உடற் பயிற்சிக்காக நடை பயணம் மேற்கொள்வோருக்கு அற்புதமான இடம்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை, மழை காலம். கடுமையான மழை இருப்பதால், பயணத்தை தவிர்க்கவும். தியானம் மற்றும் அமைதி காண விரும்புவோர், கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம், முக்தேஸ்வர்! தலைநகர் டில்லியிலிருந்து, 343 கி.மீ., துாரத்தில், அமைந்துள்ளது.
— ஜோல்னாபையன்.