
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமாச்சல பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில், ஸ்பிட்டி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, வஜ்ராயின புத்த மதம் பின்பற்றப்படுகிறது. திபெத் - லடாக் பகுதியில் உருவானது, வஜ்ராயின புத்த மதம்.
கடல் மட்டத்திலிருந்து, 12 ஆயிரத்து, 500 அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதியில், ஸ்பிட்டி நதி ஓடுகிறது. குளிர் காலம் மற்றும் இளவேனில் காலங்களில், சாலைகள் துண்டிக்கும் வகையில், கடும் பனி பொழிவு இருக்கும்.
இங்கு, கீ துறவி மடம் மற்றும் தபு துறவி மடம் உள்ளன. தலாய் லாமா விரும்பி வந்து செல்லும் துறவி மடங்கள் இவை.
ஜூன் முதல் அக்டோபர் வரை, சுற்றுலா பயணத்துக்கு ஏற்றது. ஆனாலும், இவ்வழியே வாகனங்களை ஓட்ட, தனி திறமை வேண்டும். மலை ஏறுபவர்கள் மற்றும் பைக்கில் கூட்டமாக வலம் வருவோர், அடிக்கடி வந்து செல்லும் பகுதி இது. இங்கு, பெரிய புத்தர் சிலை ஒன்றும் உள்ளது.
- ஜோல்னாபையன்.