PUBLISHED ON : ஆக 28, 2016

தமிழக அரசு பேருந்தில், நடத்துனராக உள்ள கோவையைச் சேர்ந்த யோகானந்தன், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து, விசிலடிக்கும் சாதாரண நடத்துனர் மட்டும் அல்ல; இதுவரை, ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட இயற்கை நேசனும் ஆவார்.
நீலகிரியில் தான் படித்த காலத்தில், தினமும் காட்டு வழியாக, காலை, மாலை என, 13 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்படிச் செல்லும் போது, மரங்களின் அழகை ரசித்தபடியே சென்றதன் விளைவு, இயற்கையின் மீது நேசம் ஏற்பட்டு, மரக்கன்றுகளை நட தூண்டியுள்ளது. இவருடைய சாதனையை பாராட்டி, 2008ல் மத்திய அரசு, 'ஈக்கோவாரியர்' என்ற விருது வழங்கி கவுரவித்தது. ஆனால், இவரால் விருது வாங்க டில்லிக்கு போக முடியவில்லை. காரணம், போக்குவரத்து அதிகாரிகள், இவருக்கு அனுமதி கொடுக்கவில்லை.
'நாய் புல்லு திங்காது; அது, பசுவையும் திங்கவிடாது!' என்ற பழமொழி தான் ஞாபம் வருகிறது!
— ஜோல்னாபையன்.
