குற்றவாளியை மட்டுமல்ல... புற்றுநோயையும் கண்டுபிடிக்கும்!
குற்றவாளியை மட்டுமல்ல... புற்றுநோயையும் கண்டுபிடிக்கும்!
PUBLISHED ON : ஆக 28, 2016

வீட்டை காவல் காத்து வந்த நாய்கள், பின், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புற்றுநோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்கும் திறமை, நாய்களுக்கு இருப்தாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த, 1989ல் சர்வதேச மருத்துவ பத்திரிகையான, 'லான்செட்'டுக்கு பெண் ஒருவர் எழுதிய கடிதத்தில், தன் உடலில் ஒரு மச்சம் உள்ளதென்றும், அதை, தன்னுடைய நாய் நுகர்ந்து பார்த்து, தொல்லை செய்தது; விரட்டினாலும், போவதில்லை. அந்த மச்சம் வளர்ந்து வருவதால், மருத்துவரிடம் சென்று, சோதனை செய்ததில், அது, புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, நடைபெற்ற ஆராய்ச்சியில் தான், நாய்களுக்கு இந்த திறமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகப்பெரிய நீச்சல் குளத்தில், ஒரு சொட்டு ரத்தம் கலந்தால் கூட, அதை கண்டுபிடிக்கும் திறமை, நாய்களுக்கு இருக்கிறது.
— ஜோல்னாபையன்.
