
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் மிக அடர்த்தியான வனப்பகுதி, தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அமேசான். இங்கு, பல்வேறு வகையான தாவரம், பாம்பு, மீன் உட்பட, பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன.
கடந்த, இரண்டு ஆண்டுகளில் இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில், புதிதாக, 381 உயிரினங்கள் வாழ்வது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இவற்றில் பெரும்பாலானவை, தாவரங்கள் மற்றும் மீன்கள்.
ஒவ்வொரு ஆண்டும், இங்கு, பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவது, ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
— ஜோல்னாபையன்.

