தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாருக்குள்ளே நல்ல நாடு...

பாருக்குள்ளே நல்ல நாடு...

பாருக்குள்ளே நல்ல நாடு...


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலப்பரப்பில், உலகின் ஏழாவது பெரிய நாடு, இந்தியா. அடுத்த, சில ஆண்டுகளில், உலகில், மொத்த உழைக்கும் சக்தியில், கால் பங்கினர் இந்தியர்களாக தான் இருப்பர்.

* கணிதத்தில், பை என்பதன் மதிப்பை கணக்கிட்டவர், பவ்தயானா. இவர்தான் இப்போதும் உபயோகத்தில் உள்ள பல்வேறு கணித முறைகளை கண்டுபிடித்தவர்.

* உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை இந்தியாவுக்கு சொந்தமானது. இன்றும், அஞ்சல் துறையை நடைமுறைப்படுத்தி வருகிறது, இந்தியா.

* உலகின் இரண்டாவது மிகப்பெரியது, இந்தியாவின் ரயில் பாதை இணைப்பு.

* உலகின் மிகப் பழமையான மனிதர்கள் வாழ்ந்த பகுதி வாரணாசி; கி.மு., 500ம் ஆண்டு, இங்கு புத்தர் வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

* உலகின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து, இந்தியாவில் தான் உள்ளது. 19 லட்சம் மைல் நீளத்திற்கு இங்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது, சதுரங்கம் எனப்படும், 'செஸ்' விளையாட்டு. இப்போது, உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது.

* சிந்து நதியை மையமாகக் கொண்டு உருவானது தான், இந்தியா என்ற பெயர். துவக்க காலத்தில், சிந்து நதிக் கரையில் தான் குடியிருப்புகள் உருவாகின. சிந்து சமவெளி நாகரிகம் என்று இது அழைக்கப்படுகிறது.

* உலகின் மிகப் பழமையான நாகரிகங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. எகிப்து, மெசபடோமியா ஆகிய பேரரசுகளை காட்டிலும் மிகப்பெரிய பேரரசுகள் இந்தியாவில் இருந்தன.

* இந்தியா எப்போதும், அடுத்த நாடுகள் மீது போர் தொடுத்ததில்லை; ஆனால், அலெக்சாண்டர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தியா மீது படையெடுத்துள்ளனர்.

* உலகிலேயே மிகப்பெரிய சினிமா தொழில், இந்தியாவுக்கு சொந்தம்; பெரும்பாலான இந்திய படங்கள், மும்பையில் தயாராகின்றன.

* பூஜ்யம் அல்லது ஜீரோவை கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்தியவர்கள், இந்தியர்கள்.

* மிகப் பழமையான கட்டடங்களும், ஆலயங்களும் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் உள்ள கல்வெட்டுகளும், ஓவியங்களும் அந்த காலகட்டத்தின் கதைகளை சொல்கின்றன.

* தகவல் தொழில்நுட்பத்தில், 'பெண்டியம் சிப், ஹாட்மெயில்' ஆகியவற்றை உருவாக்கியவர்கள் வினோத் தம், ஷபீர் பாட்டியா என்ற இந்தியர்கள். மேலும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.

* இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு,1 கோடியே, 20 லட்சம் டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகின்றன. இது, 2,400 யானைகளுக்கு சமம்.

* இந்திய பருத்தி, மிகவும் புகழ்பெற்றது. ரோமானியர்களும், மங்கோலியர்களும் தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்த, இந்திய பருத்தியால் நெய்யப்பட்ட, மெல்லிய காற்றோட்டமான உடைகளை தான் அணிந்தனர்.

* இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பழங்களில், வாழைப் பழம் முக்கியமானது; இந்தியாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் உள்ளது, பிரேசில்.

* இந்தியாவின் தேசிய பானம், தேநீர்; பல்வேறு நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்கிறது, இந்தியா.

* இந்தியர்கள் தான், விலைமதிப்பு மிக்க மசாலா பொருட்களை தங்கள் உணவில் பயன்படுத்துகின்றனர்.

* இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம், 5 ஆயிரத்து, 471கி.மீ., ஆனால், இந்தியாவுக்கு சொந்தமான தீவுகளின் கடற்கரை நீளத்தையும் சேர்த்தால், 7 ஆயிரத்து, 563 கி.மீ.,

* உலகில் உள்ள சுதந்தரவனக் காடுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது; இந்த காடுகள் பெங்கால் புலிகளின் இருப்பிடமாகும்.

* அலகாபாத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும், 'கும்பமேளா' உலகின் மிக அதிகமாக கூட்டம் சேரும் மத நிகழ்ச்சியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us