தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காதலைச் சொல்ல இப்படி ஒரு வழி!

காதலைச் சொல்ல இப்படி ஒரு வழி!

காதலைச் சொல்ல இப்படி ஒரு வழி!


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய இளைஞர்கள், தங்கள் காதலிகளை கவர, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சீனாவைச் சேர்ந்த, சென்மில் என்ற இளைஞர், நீண்ட காலமாக ஒரு பெண்ணை காதலித்தார்; ஆனால், அந்த பெண், அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நண்பர்களின் உதவியுடன், அந்த பெண்ணை, ஒரு ரகசிய இடத்துக்கு வரவழைத்தார், சென் மில். அங்கு ஏற்கனவே, ஏராளமான ரோஜாப்பூக்களை கொட்டி, அதில், விலை உயர்ந்த, 25 ஐபோன்களை கொண்டு, இதயம் போன்று வடிவமைத்திருந்தார்.

தன் காதலியை அந்த இடத்தில் நிற்கச் செய்து, 'இது, உனக்கு நான் அளிக்கும் சிறிய காதல் பரிசு...' என, காதல் டயலாக்கை அடித்து விடவே, அந்த பெண், உடனடியாக காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்.

'ஆமாம்... 25 மொபைல் போன்களை வைத்து, உங்கள் காதலி என்ன செய்யப் போகிறார்...' என, சென் மில்லிடம் கேட்டால், 'என் காதல் சக்சஸ் ஆச்சே... அது போதும்...' என்று சிரித்தார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us