/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இனி பெண்களுக்கு மரியாதை!
/
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இனி பெண்களுக்கு மரியாதை!
PUBLISHED ON : செப் 27, 2015

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எப்போதும் பெண்களை குறைத்து மதிப்பிட்டு காட்சிகள் எடுக்கப்படுவது வழக்கம். அதுவும், ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர், பெண்களை, பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்வார்.
இதுகுறித்து, கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரிப்போர், அதைப் பற்றி கவலைப்பட்டது இல்லை.
தற்போது,'ஸ்பெக்டர்' என்ற ஜேம்ஸ் பாண்ட் படம் தயாராகி வருகிறது. டேனியல் கிரேக் தான், இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்கிறார். இதில், முதல் முறையாக பெண்களை மதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டுள்ளன. ' இந்த படம், முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்து, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்...' என்கிறார் டேனியல் கிரேக்.
— ஜோல்னாபையன்.

