
வெளிநாடுகளில் உள்ள பிரபலங்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையை, மற்றொரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்தால், மீடியாக்கள் அதை கடுமையாக விமர்சிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜெனிபர் லோபசும், சமீபத்தில் இப்படி கேலி, கிண்டல்களுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த தர்மசங்கடத்தை தவிர்ப்பதற்காக, தனியாக சில பணியாளர்களை நியமித்து, கம்ப்யூட்டர் மூலமாக, தகவல் தொகுப்பு எனப்படும், 'டேட்டா பேஸ்' ஐ உருவாக்கியுள்ளார்.
அவரிடம், எத்தனை உடைகள் உள்ளன, அந்த உடைகள் எப்போது வாங்கப்பட்டன, உடைகளின் நிறம், வடிவமைப்பு, கடைசியாக அந்த உடையை எந்த நிகழ்ச்சிக்கு, அணிந்து சென்றார் என்ற அனைத்து விவரங்களும் அதில் உள்ளன.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பங்கேற்க செல்லும் முன், இந்த தகவல் தொகுப்பில் உள்ள விவரங்களை பார்த்து விட்டுத் தான், உடைகளை தேர்வு செய்து, அணிகிறார் ஜெனிபர் லோபஸ்.
— ஜோல்னாபையன்.

