PUBLISHED ON : நவ 15, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு, ஸ்டார் வார்ஸ் சீரியல் படங்கள் என்றால் கொண்டாட்டம் தான். இதுவரை வெளிவந்துள்ள ஆறு படங்களுமே, 'பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!'
ஏழாவதாக, தி போர்ஸ் அவெக்கன்ஸ் என்ற படம் தயாராகி வருகிறது. டிசம்பர், ௧௮ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே ரசிகர்களிடம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. மூன்று மாதங்களுக்கு முன்பே, இப்படத்துக்கான முன்பதிவு துவங்கி விட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் படம் வெளியாகும் தேதியில் இருந்து, இரண்டு மாதங்கள் வரை, டிக்கெட்டுகள், 'புக்' ஆகி விட்டன. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள், படம் பார்ப்பதற்காக, வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
— ஜோல்னாபையன்.