
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், குயின் டுயான். 27 வயதான இவருக்கும், லண்டன் பிரோப் என்பவருக்கும் சமீபத்தில், திருமணம் நிச்சயமானது. திருமணத் தேதி குறிக்கப்பட்டு, நட்சத்திர ஓட்டலில், தடபுடலான விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில், ஏதோ ஒரு காரணத்தால், திருமணத்தை ரத்து செய்து விட்டார், லண்டன் பிரோப். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது சாதாரண விஷயம் என்பதால், மணமகள் குயின் டுயான் பெரிதாக கவலைப்படவில்லை.
ஆனாலும், விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகள் வீணாகி விடக் கூடாதே என்பதற்காக, அங்கு வசிக்கும், 120 ஏழை குடும்பத்தினரை அழைத்து வந்து, நட்சத்திர ஓட்டலில் சாப்பிட வைத்தனர். விதம் விதமான உணவுகளை சாப்பிட்ட சந்தோஷத்தில், அந்த ஏழைகள், குயின் டுயானை, மனதாரவும், வாயாரவும் வாழ்த்தி சென்றனர். நெகிழ்ந்து போன குயினின் கண்களில் ஆனந்த கண்ணீர்!
— ஜோல்னாபையன்.