PUBLISHED ON : ஆக 11, 2013

அ நிறம் | அளவு
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், 2016ல், சர்வதேச கப்பல் கண்காட்சி நடக்கவுள்ளது. இதில், 'அலெக்சாண்டிரியா வோஸ்னோசென்கி' என்ற, பிரபலமான கப்பல் கட்டும் நிறுவனம், மிதக்கும் அணு உலை கப்பலை அமைத்து, அசத்தப் போகிறது. இதற்காக, அணு உலைகளுடன் கூடிய, பிரமாண்ட கப்பல், வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கப்பல் தயாரானால், உலகின் முதல் அணு உலை கப்பல் என்ற பெருமையை பெறும். இந்த கப்பல், எந்த நகரங்களுக்கெல்லாம் செல்கிறதோ, அந்த நகரங்களுக்கெல்லாம், இந்த கப்பலிலிருந்து, மின்சாரம் சப்ளை செய்ய முடியுமாம்.
— ஜோல்னா பையன்.
