
ஹாலிவுட்டின் அழகுப் பதுமை, ஏஞ்சலினா ஜோலியும், பிரபல நடிகர் பிராட் பிட்டும், கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்வில், லூபிதா என்ற நடிகையால், புயல் வீசிக் கொண்டிருக்கிறது. பிராட் பிட்டும், லூபிதாவும், சமீபத்தில், ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர். இதில், லூபிதாவிடம் மனதை பறி கொடுத்து விட்டார், பிராட் பிட். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள ஏஞ்சலினா, சரியாக சாப்பிடுவதும் இல்லை; தூங்குவதும் இல்லை. சமீபத்தில், ஒரு பட விழாவுக்கு வந்திருந்த ஏஞ்சலினாவை பார்த்தவர்கள், ஆடிப் போய் விட்டனர். அந்த அளவுக்கு, உடல் மெலிந்து, நோயாளி போல் காணப்பட்டார். உடலின் பல இடங்களில், எலும்புகள் துருத்தி கொண்டிருந்தன. கண்ணுக்கு கீழே, கருவளையம் காணப்பட்டது. ஏஞ்சலினாவின் கவர்ச்சியான உதடுகள், தடித்துப் போய் இருந்தன. அவரை பார்த்தவர்கள், 'ஏஞ்சலினாவுக்கா இந்த நிலை...' என, பரிதாபப்பட்டனர்.
— ஜோல்னாபையன்.

