PUBLISHED ON : செப் 03, 2017

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
அதிகம் பழுக்காத மஞ்சள் பூசணிக்காய் - கால் கிலோ
வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோ
சேப்பங்கிழங்கு - கால் கிலோ
பச்சை பயறு - நூறு கிராம்
கறிவேப்பிலை
உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
தேங்காய் - அரை மூடி (பால் எடுக்க)
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - நான்கு
செய்முறை: எல்லா காய்கறிகளையும் சிறிய சதுரமாக வெட்டி உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காயை துருவி கெட்டி பால் எடுக்கவும். பாசிப்பருப்பையும் வேக வைக்கவும். காய்கறிகளுடன் பாசிப்பருப்பை சேர்த்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஓலன் தயார்!
