PUBLISHED ON : செப் 03, 2017

அ நிறம் | அளவு
சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதி என, பல்வேறு அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, மக்கள் மனு போடுவது உண்டு. ஆனால், வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து, கடவுளுக்கு மனு போடும் பக்தர்களை கேள்விப்பட்டுள்ளீர்களா?
இமயமலை அடிவாரத்தில், குமயூண் என்ற இடத்தில் உள்ளது, கோகுல் தேவனின் கோவில். இங்கு, வழக்கில் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டி, வழக்குகள் பற்றிய விவரங்களை, பதிவு பத்திரங்களில் எழுதி, அதை, கோவில் மரத்தில் கட்டி தொங்க விட்டு, பிரார்த்தனை செய்கின்றனர். 'நீதி மன்றங்களில், நீதி கிடைக்கா விட்டாலும், கடவுள், நீதி வழங்குவார்...' என்று, நம்புகின்றனர், பக்தர்கள்.
— ஜோல்னாபையன்.
