தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எலும்புகளால் ஆன சர்ச்!

எலும்புகளால் ஆன சர்ச்!

எலும்புகளால் ஆன சர்ச்!


PUBLISHED ON : ஆக 25, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செக் குடியரசு நாட்டில், 'செட்லெக்' என்ற இடத்தில், ஒரு சர்ச் உள்ளது. இதை, 'சர்ச் ஆப் போன்ஸ்' - அதாவது, எலும்புகளால் ஆன சர்ச் என்று அழைக்கின்றனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு, சர்ச் முழுக்க, ஒரு இடம் பாக்கி இல்லாமல், பல வடிவங்களில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில், இந்த பகுதியில், தொடர்ந்து, சண்டை நடந்து வந்துள்ளது. அப்போது, ஏராளமானோர் இறந்து போயினர். இறந்தவர்களை புதைப்பதற்கு, போதிய இடவசதி இல்லாமல், ஏற்கனவே புதைத்து, மண்ணோடு மண்ணானவர்களின் எலும்புக் கூடுகளை, வெளியே எடுத்து, அந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை, புதைத்தனர். எடுத்த எலும்புக் கூடுகளை, என்ன செய்வது என்று யோசித்தனர். கை எலும்பு, கால் எலும்பு என, தனித்தனியாக பிரித்து, அவற்றை சர்ச்சுக்குள் அலங்கார மணிகள் தொங்க விடுவதைப் போல், அழகுற அமைத்து விட்டனர்.

தொங்கு சர விளக்குகள், பக்கவாட்டு விளக்குகள், மதுக்கிண்ணங்கள், எலும்புகளை கடித்தபடி இருக்கும் மண்டை ஓடு என, கற்பனையை இஷ்டத்துக்கு தட்டிவிட்டு, அழகுப்படுத்தி விட்டனர்.

போரில், எவ்வாறெல்லாம் காயம்பட்டு இறந்திருக்க கூடும் என்பதை காட்டும் விதத்தில், எலும்புகளால் ஆன, கண் காட்சியையும் அமைத்துள்ளனர். சரி... இவற்றை பார்த்தவர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போமா...

'அச்சமூட்டும் வகையில் உள்ள இந்த சர்ச்சுக்குள், ஒரு வித புல்லரிப்பு உணர்வுடன் சென்று வந்தோம்...' என்கின்றனர் சிலர்.

அங்கேயே தங்கி, வேலை பார்க்கும் பெண் அடித்த கமென்ட் என்ன தெரியுமா... 'எனக்கு, இந்த எலும்பு கூடுகளை பார்த்தால், பயம் ஏற்பட வில்லை. நடமாடும் நிஜ மனிதர்களை கண்டால் தான், பயமாக இருக்கிறது...' என்கிறார்.

இந்த சர்ச், வாரம் ஏழு நாட்களும் திறந்திருக்கும். சர்ச்களில் வழக்கமாக நடைபெறும், பிரார்த்தனை கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24, 25 தேதி மட்டும் மூடியிருக்கும்.

***

ராஜி ராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us