நம்மிடமே இருக்கு மருந்து! - வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும், தீர்வுகளும்!
நம்மிடமே இருக்கு மருந்து! - வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும், தீர்வுகளும்!
PUBLISHED ON : ஏப் 10, 2022

செரிமானத்தில் கோளாறு உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது, காற்று அதிகமாக உடலில் உருவாகி, தொல்லையை தருகிறது. வேலை பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான், வாயுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணம்.
சில நேரங்களில், வாயுத் தொல்லை தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாத வரை, நம் உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாற்றம் இருந்தால், அதை சரி செய்ய வேண்டியது அவசியம்.
வாயு உருவாகும் சமயங்களில், ஒரு துண்டு பப்பாளியை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது, வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக துாண்டுவதால், வாயு தடுக்கப்படுகிறது.
மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச்சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன், இவைகளை வெறும் வாயில் மென்றால், உடனே நல்ல பலன் கிடைக்கும்.
அமில உற்பத்தியை தடுக்கிறது, புதினா. வாயுவால் அவதியுறும்போது, புதினா இலைகளை மென்றால், நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால், விரைவில் பலன் கிடைக்கும்.
தேங்காய் துருவலை சாப்பிடலாம். தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாயுத் தொல்லை குணமாகிறது. மேலும், இவை அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்.
பொ. பாலாஜி கணேஷ்
